news Breaking News
clock

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.


பென்னாகரத்தை

அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி கங்கா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி கூட்டத்தின் நோக்கம் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் பேசியதாவது. 8 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு ஆதார் புதுப்பித்தலுக்கான சேவை கட்டணம் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு இல்லை எனவும், திறன் மாணவர்கள்  திறன் பெறுவதற்காக அரசு மேற்கொண்டு வந்துள்ள திறன் திட்டத்தின் மூலமாக தமிழ், ஆங்கிலம், கணிதம் எளிமையாக கற்றுக்கொள்வது, இல்லம் தேடிக் கல்வி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மன்ற செயல்பாடுகள்,

வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சுற்றுப்புற சுத்தம், டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்டவைகள் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள்  பழனிச்செல்வி,கல்பனா, கலைச்செல்வி,ராஜேஸ்வரி அனுப்பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News