திருவள்ளூர், ஜன.
சிஎஸ்கே–திருவள்ளூர் டிசிஏ இடையிலான பள்ளி கிரிக்கெட் தொடர் 2025–26 போட்டிகளில் வேலம்மாள் குழுமப் பள்ளிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
குரூப் ஐ போட்டியில், எஸ்பிஓஏ மற்றும் ஜூனியர் கல்லூரி 27.2 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.கே.பி.தஸ்வின் குமார் 37 ரன்கள் எடுத்தார். வேலம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி தரப்பில் ஹ்ருதித்யா 3/17 என அபாரமாக பந்து வீசினார். தொடர்ந்து ஆடிய வேலம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி 10.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்து எளிதான வெற்றியை பதிவு செய்தது. ஜி.வி. கமலேஷ் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
மற்றொரு ஆட்டத்தில், வேலம்மாள் வித்யாலயா (மேல் அயனம்பாக்கம்) 30 ஓவர்களில் 153/9 ரன்கள் சேர்த்தது. ஆர்.ஆர்.அக்சய பிரணவ் 42, எஸ். தர்ஷன் 50 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய எபினேசர் மார்க்கஸ் (புதூர்) 26.5 ஓவர்களில் 102 ரன்களுக்கு சுருண்டது.
குரூப் ஜெ போட்டியில், வேலம்மாள் வித்யாஷ்ரம் (அம்பத்தூர்) 30 ஓவர்களில் 182/9 ரன்கள் குவித்தது. பி.சாய் பிரதீப் 63 ரன்களுடன் அணியின் முன்னணி ஆட்டக்காரராக திகழ்ந்தார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஒலிவ் ட்ரீ குளோபல் 26.5 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மற்றொரு ஆட்டத்தில், எபினேசர் (கொரட்டூர்) 30 ஓவர்களில் 229/8 ரன்கள் குவித்து. எஸ். யாஷ்ராஜ் 93 ரன்களுடன் அவுட் ஆகாமல் விளையாடினார். அடுத்து களம் இறங்கிய ஜெய ஜெய சங்கரா அணி 30 ஓவர்களில் 85/6 ரன்களையே எடுத்து தோல்வி கண்டது.
இந்தப் போட்டிகள் மூலம் பல அணிகள் அரையிறுதி சுற்றுக்கான நம்பிக்கையை வலுப்படுத்தின.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?