சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
Feb 17 2026
24
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, மனிதநேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த தீர்மானத்தில், “தமிழ்நாட்டு நலன் களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரி மைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத பாசிஸ்டுகளின் கொடும்பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்து நின்று, சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி, சமய நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் வழியே தமிழ்நாட்டின் ஆட்சியை நடத்தி, ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறு களைக் கடந்து நிற்கும் திமுக அரசையும் அதை கலைஞ ரின் முத்திரையோடு இயக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களையும் இப்பொதுக்குழு பாராட்டுகிறது. இந்த ஆட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட, சமூக நல்லிணக்கம் மலர்ந்திட, சமூகநீதி கோட் பாடுகள் ஓங்கி ஒளிர்ந்திட, சிறுபான்மையினர் முன்னேற்றம் சிறந்திட திமுக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்க ளித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறுவதற்கு முதன்மை காரணமாக நமது களப்பணிகள் அமைந்திட வேண்டும் என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?