
💥 கோமுகி அணை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் என்ற ஊரிலிருந்து சுமார் 10கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஓர் அணையாகும்.
💥 கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணை, காமராஜர் முதல்வராக இருந்த 1963ஆம் ஆண்டில் அணை கட்டும் பணி தொடங்கி, பக்தவத்சலம் முதல்வராக இருந்த பொழுது 1965ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
💥 கல்வராயன் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது.
💥 360 ஹெக்டேர் நீர்ப்பரப்பு கொண்ட இந்த அணை மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
💥 இதற்காக அணையில் இருந்து 8,917 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் செல்கிறது. கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும்.
சிறப்புகள் :
💥 அழகிய பூங்காக்கள்...
💥 குதிரை சவாரி செய்யும் நேருவின் சிலை....
💥 குறள் எழுதும் திருவள்ளுவர் சிலை...
💥 சிவபெருமான் சிலை...
💥 உழைப்பாளிகள் சிலை...
💥 கண்கவர் விளக்குகள்...
💥 சிறப்புமிக்க காட்சி மேடைகள்...
💥 சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டுத் திடல்கள்...
எப்படிச் செல்வது?
💥 கள்ளக்குறிச்சியிலிருந்து 17கி.மீ. தொலைவில் கோமுகி அணை அமைந்துள்ளது. இங்கிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
எப்போது செல்வது?
💥 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
இதர சுற்றுலா தலங்கள் :
💥 சித்தேரி மலை
💥 கல்வராயன் மலை
💥 பெரியார் அருவி
💥 மேகம் அருவி
💥 வெள்ளி அருவி
💥 சின்னத் திருப்பதி கோவில்
💥 மணிமுத்தாறு அணை
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?