காலையில் எழுந்தவுடன்
கைப்பேசி..நீ
கையிலே எடுக்காதே
தம்பி!
பாலையே குடித்தவுடன்
படிப்பை..நீ
பண்புடன் படித்திடுவாய்
தம்பி!
மூளையைப் பாதிக்கும்
கைப்பேசி..அதை
மூலையில் வைத்திடடா
தம்பி!
நாளுமே வேண்டாமே
கைப்பேசி..அது
நரம்பையே பாதிக்கும்
தம்பி!
மனநலக் கோளாறு
ஏற்படும்..தம்பி
மாண்பில்லாக் கைப்பேசி
யாலே!
கனிவுடன் சொல்கிறேன்
கேட்பாய்..தம்பி
கட்டாயம் கைப்பேசி
வேண்டாம்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%