கென்யாவில் ராணுவ பயிற்சியின்போது தீ: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து ஒப்புதல்
Aug 26 2025
168
நைரோபி,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள வோல்டைகா வனப்பகுதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்தியது. அப்போது ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டு உள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?