news Breaking News
clock

கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாளை கரூர் வருகை

கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாளை கரூர் வருகை



கூட்ட நெரிசலில் பலியான 12 பேரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

கரூர்,


கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே பலியான 12 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.


மேலும் இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்த குழுவில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் வி.மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்புக்குழு கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை கண்காணிக்க நாளை (திங்கட்கிழமை) கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியின் வருகையால் இந்த வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News