news Breaking News
clock

கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பம்



ஒற்றுமையின் சின்னம்

ஒருங்கமைப்பின் வண்ணம்

பற்றுடைய குடும்பம்

பாசமிகு உடும்பு!

சுற்றுமுற்றும் உலகம்

சூழ்ந்திட்ட கலைகள்

நற்றமிழில் சொற்கள்

நாடிவரும் கற்க!


குடும்பத்தில் கூட்டு

கொஞ்சியேதான் நாட்டு

அடும்பகையை நீக்கு

அன்புதனை ஆக்கு!

இடுக்கண்ணே இன்றி

ஈடில்வாழ் நன்று

எடுக்கின்ற செயலை

இனிதாக முடிப்பாய்!


அன்போடு பிணைப்பு

ஆறுதலாய் இணைப்பு

பண்போடு பாசம்

பரிவோடு நேசம்!

இன்போடு பேசல்

ஈடில்லா ஆசை

கண்ணோட கண்ணாய்க்

காட்சியளிக் குடும்பம்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News