
ஆடும் அழகு மயிலுக்கு
ஆகவும் குரல் ஒன்றும்
தடையில்லை ...
பெரிய உருவ யானைக்கு
சிறிய கண்கள்
பழுதில்லை..
இரவில் அலறும் ஆந்தைக்கு
பகலில் கண்கள்
தெரிவதில்லை...
ஒரு நாள் வாழும் ஈசலுக்கு
மறுநாள் மடிதலில்
மயக்கமில்லை..
சிறிய உருவ எறும்புக்கோ
சேமிப்பில் என்றும்
தயக்கமில்லை..
இனிய குரல் குயிலுக்கோ
கரிய நிறம் ஒன்றும்
குறையில்லை ...
உடற்குறை என்றும்
பெரிதில்லை ..
திறமைக்கு முன்
அவை எதுவுமே இல்லை...
ஐந்தறிவு உயிரின வாழ்வில் மயக்கமில்லை தயக்கமுமில்லை ...
ஆறறிவு மனிதா நீ மட்டும் ஏன்
குறை எண்ணி குழம்புகிறாய்???
தி.வள்ளி
திருநெல்வேலி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%