நம்பிக்கை...

நம்பிக்கை...


---------------------  

நம்பிக்கை என்ற ஒரு விதையை மனதில் விதைத்தால் 

காலத்தின் மழையில் மெதுவாக முளைக்கும்.

தோல்வி என்ற காற்று அடித்தாலும் வேர்கள் தாங்கிப் பிடிக்கும்.

இருளில் கூட ஒளியைத் தேடி வளரும்.

கண்ணீர் துளிகள் உரமாக மாறும். 

கனவுகள் வானில் இலைகளாய் விரியும். 

இன்று சுமையாகத் தோன்றும் பாதை,

நாளை இனிமையான பயணமாக மாறும்.

நம்பிக்கை உள்ளவன் விழுந்தாலும் எப்படியும் வீறு கொண்டு எழுவான்.

விடியல் அவனைத் தழுவும். 

நம்பிக்கை என்ற விதை மனதில் விதைக்கப்படுவதால்

காலத்தின் மழையில் மெதுவாக முளைக்கும்.

தோல்வி என்ற காற்று அடித்தாலும் வேர்கள் ஊன்றி நிற்கும்.

இருளில் கூட ஒளியைத் தேடி வளரும்.

கண்ணீர் துளிகள் உரமாக மாறும். 

வானில் கனவுகள் இலைகளாய் விரியும். 

இன்று சுமையாகத் தோன்றும் பாதை,

நாளை இன்பமான பயணமாக மாறும்.

விடியல் அவனைத் நிச்சயம் தழுவும்.



அன்புடன்

உ.மு.ந.ராசன்கலாமணி

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%