கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: வட மாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: வட மாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள்!


 

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற 8 வயது சிறுமியைப் பின் தொடர்ந்து சென்ற வட மாநில இளைஞர் ராஜூ பிஸ்வகர்மா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினார்.


இதையடுத்து, தனிப்படைகள் அமைத்து தேடிய திருவள்ளூர் காவல் துறையினர், சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து பிஸ்வகர்மாவை கைது செய்தனர். பின்னர், விசாரணையில் அவர் தில்லியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.


கைதான பிஸ்வகர்மாவின் புகைப்படம், சிறுமியிடம் காட்டப்பட்டு அவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட பிறகு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கை கடந்த 5 மாதங்களாக திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த தீர்ப்பில், பிஸ்வகர்மாதான் குற்றவாளி என்றும், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


மேலும், சிறைத் தண்டனையுடன் ரூ. 1.45 லட்சம் அபராதமும் பிஸ்வகர்மாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%