கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளுக்கு அஞ்சலி
Jul 18 2025
10

கும்பகோணம், ஜூலை 16-
2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கல்வி வியாபாரத் தீயில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் காசிராமன் தெருவில் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி இயங்கி வந்தது. இதில் மேல்தளத்தில் இருந்த சமை யல் அறையில் தீ விபத்து ஏற்பட்டு, பள்ளி முழுவதும் எரிந்து நாசமானது. அங்கு வகுப்பறையில் படித்து வந்த 94 குழந்தைகள் தீக்கிரையான நிலையில், 14 குழந்தைகள் கொடுங் காயத்துடன் உயிர் தப்பினர். உலகையே உலுக்கிய இக்கொ டூரச் சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 16 அன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோணம் தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி யில் குழந்தைகளின் உருவப் படத் திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், நகரச் செய லாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் செல்வம், ஆர்.ராஜ கோபாலன், பழ.அன்புமணி, மாநக ரக் குழு உறுப்பினர் பார்த்தசாரதி, சுமதி, ஜி.கண்ணன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ் நாடு உயர்கல்வித் துறை அமைச் சர் கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர், அரசு அதி காரிகள் மற்றும் அனைத்து கட்சி களைச் சேர்ந்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இந்திய மாணவர் சங்கம் அஞ்சலி ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்ன தாக கும்பகோணம் பாலக்கரை யில் உள்ள நினைவிடத்திலிருந்து ஊர்வலமாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் வந்து, சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது சங்கத்தின் மாநிலச் செயலாளர் அரவிந்த்சாமி கூறுகை யில், “ஜூலை 16 ஆம் நாளை குழந் தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தனி யார் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்து, பாது காப்பு வசதிகளை உறுதிசெய்த பின், அனுமதி வழங்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள், அவர்கள் விரும்பும் தின்பண்டங் களை உருவப்படங்களுக்கு முன் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?