கும்பகோணம் அரசு கல்லூரியில் நிழல் தரும் மரங்கள் பதியமிட்டு நாற்றங்கால் உற்பத்தி
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், அழகுத் தாவரங்கள், மூலிகைத் தாவரங்கள், பழ மரக்கன்றுகள், நிழல் தரும் மரங்கள் முதலானவை பதியமிட்டு நாற்றங்கால் உற்பத்தி நிகழ்வு தொடங்கப்பட்டது. நாற்றங்கால் முறையாகப் பராமரிக்கப்பட்டு வளர்ந்த பிறகு, அவை அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் மா. கோவிந்தராசு தலைமை வகித்தார். கல்லூரி மூத்த பேராசிரியர் வேதியியல் துறைத் தலைவர் மா. மீனாட்சி சுந்தரம், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத் தலைவர் சீ. தங்கராசு, தேர்வு நெறியாளர் முனைவர் வெ. பாஸ்கர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தாவரவியல் துறைத் தலைவர் இரா. முருகன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வமுடைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?