கும்பகோணத்தில் கடந்த 6 மாதங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல்

தஞ்சை,
குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில், இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிராக அனைத்து பகுதி போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்துபவர்கள் அதிகளவில் ரெயிலை பயன்படுத்துவதாகவும், ரெயில்களில் குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுகுறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசார் கூறுகையில், உடலுக்கு தீங்கு விளைவிப்பதால் தமிழகத்தில் அரசால் புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வழிகளில் புகையிலை பொருட்கள் கொண்டு வந்தாலும் ரெயில்களிலும் சிலர் புகையிலை பொருட்களை கடத்தி வருகின்றனர். கும்பகோணத்தில் மட்டும் கடந்த 6 மாதத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சுமார் 300 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் ரெயில்வே போலீசார் சார்பில் தினமும் ரெயில்களில் சுழற்சி முறையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ரெயிலில் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள் மூட்டையாக புகையிலை பொருட்களை ரெயில் கழிவறை, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருக்கை கீழ் உள்ளிட்ட இடங்களில் வைத்து விடுகின்றனர். ரெயிலில் கேட்பாரற்று பொருட்கள் கிடந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட ரெயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த காரணத்திற்கும் அந்த பொருட்களை நெருங்க வேண்டாம். தொலை தூரத்தில் இருந்து வரும் ரெயிலில் வித்தியாசமான வாசனைகள் வந்தால் போலீசாரிடம் தெரிவிக்கவேண்டும் என்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?