குடல் பாதுகாப்பு: அழற்சியை நீக்கி ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்...

குடல் பாதுகாப்பு: அழற்சியை நீக்கி ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்...



1. பூண்டு


இதில் இருக்கும் இனுலின் குடலுக்குள் சிறந்தது. பூண்டு உண்பதால் அழற்சி நீங்கி நோயெதிர்ப்பு அதிகரிக்கிறது‌. இதில் உள்ள ப்ரீபயாடிக் பண்பு குடலை பாதுகாக்கிறது.


2. வெங்காயம்


நம் உடல் செரிமானத்தை சீராக்க, வெங்காயத்தில் உள்ள Fructooligosaccharides (FoS) உதவுகிறது. இது நோயெதிர்ப்பை அதிகரிப்பதுடன் கொலஸ்டிராலையும் கட்டுப் படுத்துகிறது‌. சாலட், சூப் மற்றும் சாண்ட்விச்களில் இதை சேர்ப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.


3. வெங்காயத் தாள்/ கீரை


இதில் பீரீபயாடிக்கான இனுலின் அதிக அளவில் உள்ளது. இது இதயத்திற்கும் சிறந்தது. நோயெதிர்ப்பு மற்றும் செரிமானத்திற்கும் ஏற்றது. வாரத்திற்கு இருமுறை இதை உண்ண ஆரோக்கியம் மேம்படும்.


4. தண்ணீர் விட்டான் கிழங்கு


இதில் அதிக இனுலின் உள்ளது. இதை உட்கொள்வதால் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிவிரைவில் வளர்கின்றன. செரிமான சக்தியும் சீராக்கப்படுகிறது‌. ஊட்டச்சத்து நிறைந்த இது இயற்கையான முறையில் உடலை மேம்படுத்தும்.


5. பச்சை வாழைப்பழம்


இது பழுப்பதற்கு முன் அதிக பச்சையாக இருக்கும் போது அதிக ஃப்ரீ பயாடிக் நிறைந்திருக்கும். இதன் நார்ச்சத்து நல்ல பாக்டீரியாவை ஊக்குவிக்கும். மலச்சிக்கலை தீர்ப்பதுடன் இரத்தச் சர்க்கரையையும் கட்டுக்குள் வைக்கும்.


6. சிக்கரி ரூட்


இதில் 65 சதவீதம் இன்சுலின் உள்ளது. இதை உண்ணும் போது மலச்சிக்கல் தீரும். இதை காபி பௌடருடன் சேர்ப்பார்கள். அதிகம் பயன்படுத்தாமல் மிதமாக பயன்படுத்த வேண்டும்.


7. ஓட்ஸ்


இதில் பீடாக்ளுகன் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு மிகச் சிறந்தது. இது கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்தச் சர்க்கரையும் கட்டுப்படுத்தும். இதை உண்ணுவதன் மூலம் ப்ரீபயாடிக் நிறைய கிடைக்கும் முழு ஓட்ஸ் உபயோகிப்பது நல்லது. 


8. ஆப்பிள்


இதில் உள்ள பெக்டின் ப்ரீபயாடிக் நிறைந்தது. இது அழற்சிய குறைத்து நல்ல பாக்டீரியாவை ஊக்குவிக்கும். இதன் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளதால் தோலோடு உட்கொள்வது நல்லது.


9. பார்லி


இதில் உள்ள பீட்டாக்ளுகன் ஃப்ரீ பயாடிக் நிறைந்தது. செரிமானத்தை சீராக்கும். கொலஸ்டிரால்ஐக் குறைக்கும். இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்‌ இதன் நார்ச்சத்து மிகச் சிறந்தது வாரத்தில் மூன்றுமுறை இதை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.


10. கடல் பாசி


இதில் அகர் மற்றும் ஆல்ஜினேட் என்ற ஃப்ரீ பயாடிக் நார்ச் சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பை அதிக செரிமான சக்தியை சீராக்கும் இது நல்ல பாக்டீரியாவை ஊக்குவிக்கும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%