சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் நடனம் ஆடியதற்குக் "குஞ்சிதபாதம்" என்று பெயர்.
📿இந்த தரிசனத்தைக் கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை ந்டராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும் போது, அந்த மூலிகை வேர்களுக்குக் குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது.
📿சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால் தான் எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன்.
📿அந்த இடது கால் சக்திதேவியின் அம்சம் என்கிறது புராணம். அதனால் ஆடல் நாயகனைத் தரிசிக்கும்போது கண்டிப்பாக இடது காலைத் தரிசிக்க வேண்டும். அப்படித் தரிசித்தால் வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.

சிவசக்தி
நாப்பிராம்பட்டி
ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி மாவட்டம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?