கஸ்தூரியின் முடிவு !

கஸ்தூரியின் முடிவு !

வி.கே.லக்ஷ்மிநாராயணன் 

22, 22 ஏ, ராமகிருஷ்ணா நகர் மெயின் ரோடு 

ராமகிருஷ்ணா நகர் 

போருர், சென்னை  600 116 


                                                

அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் விடுமுறையானதால் சோஃபாவில் அமர்ந்த


வாறு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் ராகவன். ஒரே மகன் ரமேஷ் மாடியில் உள்ள 


தன் அறைக்குள் இருந்தவாறு லேப் டாப்பில் மூழ்கியிருந்தான். 



அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட ராகவனின் மனைவி ஜானகி எதிரிலிருந்த ஒரு 


நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள். " என்ன, நம்ம ரமேஷுக்கு வயசு ஏறிக் 


கிட்டே இருக்கு.  இப்படி மச மசன்னு இருந்தா எப்படி ? வரன் பார்க்க ஆரம்பிக்க வேண் 


டாமா?"  நைஸாக பேச்சைத் தொடங்கினாள். 



பேப்பரை பக்கத்தில் வைத்துவிட்டு மனைவியை நேருக்கு நேர் பார்த்தவர்,  " எதுக்கு 


வேற வரன் பார்க்கணும் ? எங்கக்கா பொண்ணு கஸ்தூரி இருக்காளே,  அவளையே 


உன் பிள்ளைக்கு பார்க்க வேண்டியதுதானே ! "  என்றார் கொஞ்சம் கோபத்துடன். 



" ஓஹோ! அக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி செய்யலாம்ங்குறீங்களா ?"  



" எங்கக்கா கண் மூடுறதுத்துக்கு  முன்னாடி நம்மக் கிட்ட கேட்டுக் கிட்ட ஒரு விண்ணப்பம் ! அதை  நீ எப்படி வேணுமானாலும் எடுத்துக்கோ. அதன்படி செய்யறது 


தான் உத்தமம் !" 



" இதோ பாருங்க, தப்பா நினைக்காதீங்க. உங்கக்கா காலமாயிட்டாங்க.  அதோடு 


அவங்களுக்கு நீங்க கொடுத்த வாக்குறுதியும் காலாவதி ஆயிடிச்சுன்னு நினைச்சு 


மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்க !" 



" நீ பேசறது தப்பு ஜானகி ! அப்படிச் செஞ்சா எங்கக்காவோட ஆன்மா நம்மை மன்னிக்காது…" 



அனைத்தையும் வெளியில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்த கஸ்தூரிக்கு கடைசி 


யாக மாமா மாமியிடம் தன் அம்மா ரகசியமாக பேசிய விஷயம் தெரிந்தது. உள்ளுக் குள் நொறுங்கிப் போனாள்.  இயல்பு நிலைக்குத் திரும்பியவள் மெல்ல உள்ளே நுழைந்தாள். கஸ்தூரியை பார்த்த ஜானகி ஆடிப் போனாள். ஒருவேளை தான் பேசியதை கேட்டிருப்பாளோ என்ற பயம் வந்தது.  " வா கஸ்தூரி." அசடு வழிய வரவேற்று ஒரு இருக்கையில் அமர வைத்தாள்.  



" நமஸ்காரம் மாமா, மாமி ! சும்மா உங்களப் பார்த்து பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்."  என்றபடி அமர்ந்து கொண்டாள் கஸ்தூரி.



" ஏம்மா கஸ்தூரி, உனக்கு ஏதாவது வரன் குதிர்ந்ததா?"  கேட்ட மாமியை


   நமுட்டுச்சிரிப்புடன் பார்த்தவள்,  " ஆமா மாமி ! நானா தேடிக்கிட்டேன்.  சுரேஷ்னு ஒருத்தர் 


ஒரு ஐ.டி. கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கார்.  அவரும் நானும் ஒருத்தொருக்கொருத்தர் நேசிக்கிறோம்.  கூடிய சீக்கிரமே எங்கக் கல்யாணம் நடக்கும்…" என்று 


அழுத்தம் திருத்தமுமாகச் சொன்னாள் கஸ்தூரி. 



ஜானகிக்கு போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது. ராகவன் கஸ்தூரியின் 


பேச்சைக் கேட்டு மனசொடிந்து போனார். தன் அக்காவுக்கு கொடுத்த வாக்கு நிறை 


வேறாமல் போகப் போவதை நினைத்து வருத்தமடைந்தார். 



கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினாள் கஸ்தூரி.  



தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாமாவுக்கு பிரியமிருந்தாலும் மாமிக்கு

பிடிக்காமல் போனது தன் துரதிர்ஷ்டம் என்று வேதனைப்பட்டு அதற்காக தான்

அவிழ்த்துவிட்ட கற்பனைக் கதையை எண்ணி மனம் நொந்தபடி நடையைப் கட்டினாள்  கஸ்தூரி. 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%