
" பூபாளம் பாடும்
அதிகாலை நேரம்
சுகந்தமான பனிச்
சாரல் கலந்த
மெளனமான காற்று .... "
வெண்பனி புல் மீது
படர்ந்து நிற்க
பறவைகளின்
கானம் காற்றில்
மெல்ல மெல்ல ஆட ..."
சாணம் தெளிக்கும்
ஓசையும் தெருவாசல்
கூட்டும் இசையும்
கலந்து அழைக்க ... "
துயில் எழுப்ப
வரும் பால்காரன்
ஹாரன் ஒலியும்
மெல்ல கதவு
சாற்றும் குறு ஒலியும் .... "
கோழி கூவிவிட
மா என்கிற
கோமாதா அன்பில்
அழைக்க ....."
மெல்ல மெல்ல
தலைகாட்டி அடி
எடுத்து வைக்கும்
கதிரவனின்
பொன்நிறமும் ..."
பாதி உறக்கத்தில்
இருந்தாலும் நடக்கும்
யாவும் உணர்வில்
கலந்து உருகிட .... "
மனதில் ஆழப்
பதிந்தாலும் உடலின்
சோர்வு ஏக்கம்
தாக்கம் இன்னும்
விழிக்க முற்படவில்லை ..."
அழகிய கோலமும்
பசுமை பச்சையும்
சாணத்தின் மீது
பட்டு வரும் காற்றும் ...."
கனவை முடித்து
விட்டு நினைவை
கிள்ளி விடும்
பொழுது விடியலும் ....."
நித்தமும் பருகும்
ஆனந்தம்
கண்களுக்கு
விருந்து
ஆலய மணியோசை
இறைவனின்
தவிப்பு ....."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
9842371679 .
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?