news Breaking News
clock

கலைஞர் சிலை திறப்பு முன்னிட்டு அன்னதானம் வழங்கும் விழா:

கலைஞர் சிலை திறப்பு முன்னிட்டு அன்னதானம் வழங்கும் விழா:

கலைஞர் சிலை திறப்பு முன்னிட்டு அன்னதானம் வழங்கும் விழா:


மாநில விவசாய தொழிலாளர்அணி துணை செயலாளர் பங்கேற்பு.


செய்யாறு பிப்.14,


செய்யாறில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு முன்னிட்டு அன்னதானம் வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சா.நர்கிஸ் பானு சான்பாஷா ஏற்பாட்டில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் ,முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.


நகர மன்ற தலைவர் ஆ. மோகனவேல், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


துணை செயலாளர்கள் சீனிவாசன், சக்திவேல் ,திமுக நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் அசோக்,சுந்தர் கருணாநிதி, ஆசிரியர்கள் ரமேஷ்,சேகர், திமுக நிர்வாகிகள் ஸ்ரீதர், ரஜினி முருகன், பூபதி ,தனசேகர் , பாலாஜி, சேட்டு, சௌகார்பாய், கார்த்திக் ,மற்றும் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் தில்லை ,நகர மன்ற உறுப்பினர்கள் அகமது, ரவி ,கங்காதரன், செந்தில் ,அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் திரளான பொதுமக்கள் பங்கேற்று அன்னதானம் பெற்று பயன்பெற்றனர்.


பட விளக்கம்: செய்யாறில் கலைஞர் சிலை திறப்பு முன்னிட்டு செய்யாறு கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சா. நர்கீஸ் பானுசான் பாஷா ஏற்பாட்டில் முன்னாள் எம் எல் ஏ வ.அன்பழகன் அன்னதானம் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News