
எளிமையும் திறமையும் பொறுப்பும் ஒருங்கே பெற்ற ஆளுமையின் அகராதி
கல்விக்கண் திறந்த கர்மவீரன்!
கன்னித் தமிழ்நாட்டுக் காவலன்!
கருப்புத் தங்கத்திற்குள் வெள்ளை மனது வெள்ளி மலர்களாய் மின்னும்
தமிழனென்று சொல்லி தலைநிமிர்ந்து நிற்க இவனன்றோ உதாரணம்
உடுக்கும் உடுப்பு ரெண்டு ஜதை, காலணி, பேனா தவிர காலணா சொந்தமாக்க வில்லை
பெற்ற தாயும் மக்களோடு மக்களாய்! மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதன்
கற்றுக்கொள்ள வேண்டியது கடலளவு உள்ளது இவனிடம்! இளைஞர்களே வாருங்கள்
அரசியல் ஆதாயம் தேடவில்லை பேரும் புகழும் கேட்கவில்லை மக்கள் தொண்டு ஒன்றே சிந்தித்தவன்
இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவன் இவனன்றி இனி யாரும் எனக்கு தெரியவில்லை
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?