
அன்புடையீர் வணக்கம்! செய்தியும் படமும் அனுப்பியிருக்கிறேன். நன்றி.
-----‐----------------------------------
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் ஒருங்கிணைக்கும் பெருநகரச் சென்னை மாநகராட்சிப் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான
"மொழியியல் நுணுக்கப் பயிற்சி" சூலை 15 முதல் ஆகஸ்டு 11 வரை நடக்கிறது. இப்பயிற்சியில் ஐம்பது தமிழாசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கருத்துரை வழங்க இருக்கிறார்கள். இப்பயிற்சியின் தொடக்கவிழாவில் நிறுவனத்தின் இயக்குநர்(பொ.,) திரு.கோபிநாத் தலைமையுரையாற்றினார். தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினார்.
உதவி கல்வி அலுவலர் திருமதி சே.வேதவள்ளி வாழ்த்துரை வழங்கினார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ.செல்வக்குமார் பயிற்சி குறித்த நோக்கங்களை எடுத்துரைத்தார். பயிற்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.சுலோசனா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.சுசீலா கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி நவின்றார். மாணவி பிறைலின் டின்சியா இணைப்புரை வழங்கினார். நிறுவனப் பேராசிரியர்கள் மாணவர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?