கடலே நீயறிவாய்

கடலே நீயறிவாய்


அலையாடை உடுத்திய

கடலே நீயறிவாய்


எத்தனையோ ஜோடிகள்

மணல்மேடையி லமர்ந்து


கட்டிய கோட்டைகள்

கனவாகிப் போனகதை


உனக்குள் விழுந்து

உயிர்நீத்த இணைகளை


எண்ணிட எண்ணிக்கை

கொள்ளாது போதாது


தூரத்து வானின்

செந்நிறமும் காதலர்


சிந்திய கணக்கிலாக்

குருதியின் வண்ணமோ?


இனபேதங்கள் மாறிடா

நிலையிங்கு நீண்டிட


சாவுகள் தொடரும்

சாகரமும் நிறையும்


நுரைப்பல்லில் மென்றிடு

சாதிமத பேதங்களை!

2


முகில் தினகரன்,

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%