
ஓடுவது தேர்தான்
உருளுவது சக்கரம்தான்!
ஓங்கித் தெரிவது
ஒற்றுமையின் முகம்!
ஊர்கூடித் தேரிழுக்க
சமத்துவம் மிளிரும்!
பேதங்கள் மறையும்
வேதங்கள் ஒளிரும்!
ஆன்மீக அணுகுமுறை
ஆண்டவனைப் போற்றும்!
அதர்ம அவலங்கள்
அவனியில் மறையும்!
மனிதரை மனிதர்
மதித்து வாழ்ந்திட
திருவிழாக்கள் தெய்வீகத்
தெறிப்பின் மந்திரங்கள்!
முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%