ஒற்றைகண் மாயாவி

ஒற்றைகண் மாயாவி


ஆசிரியர் : தி.வள்ளி

வெளியீடு : புஸ்தகா (+91. 7418555884)

விலை : ரூ 100

புத்தக தேவைக்கு : 9944909487

   

சிறுவர்களுக்கு கூறப்படும் கதைகள் பல நல்ல பழக்கங்களையும், நல்ல நீதிகளையும், அவர்கள் மனதில் விதைக்கிறது. அதேபோல சாகச கதைகளும் குழந்தைகள் மனதை கொள்ளை கொள்ளும். பறக்கும் குதிரை, பேசும் கிளி, சாகசங்கள் செய்யும் விலங்கினங்கள், குள்ள மனிதர்கள் என அவர்கள்உலகம் கற்பனை விஷயங்களை உள்ளடக்கியதே. அதை மனதில் கொண்டு "ஒற்றைக்கு கண் மாயாவி" என்ற சிறுவர் புத்தகத்தை படைத்திருக்கிறார் ஆசிரியர் தி.வள்ளி. காலாந்தகன், வனராணி மற்றும் ஒற்றை கண் மாயாவி என மூன்று கதைகளை உள்ளடக்கியது இப்புத்தகம்..


காலாந்தகன்.. மரகதபுரியின் மன்னன் மேல் கொண்ட பகையால், மகாராணி குமுதவல்லியை சிறு பறவையாக்கி தூக்கிக்கொண்டு பறக்கிறான் மந்திரவாதி காலாந்தகன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தன் நண்பனுடன் சேர்ந்து இளவரசன் வீரசிம்மன் எப்படி தன் தாயை மீட்கிறான் என்பதே கதை. அவனுக்கு உதவிடும் சுறா மீன் சாரா.. பேசும் கிளி சுகர்.. பறக்கும் குதிரைகள் சம்பா வெம்பா.. என குழந்தைகளை குதூகலப்படுத்தும் விலங்குகள். சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதை.


அடுத்து வன ராணி.. சிற்றன்னையின் சதியால் குழந்தை, இளவரசி நந்தினி தேவி முனிவர் மற்றும் காட்டு விலங்குகளின் துணையுடன் காட்டில் வளர்கிறாள். அவள் தாய் மகாராணி இறந்துவிட, தந்தை காராகிரகத்தில். காட்டில் வளரும் இளவரசி எப்படி சிற்றன்னையையும், அவள் மகனையும், வென்று நாட்டையும் மன்னனையும் மீட்கிறாள் என்பதை சுவாரசியமான திருப்பங்களுடன் கூறும் கதை. நந்தினியுடன் சேர்ந்து அவள் நண்பர்கள் வனவிலங்குகள் செய்யும் சாகசங்கள் குழந்தைகளை நிச்சயம் கவரும். சரித்திர பின்னணியில் கதை நடப்பதால் குழந்தைகள் அறிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இக்கதையில் இருக்கிறது.     


ஒற்றைக்கண் மாயாவி.. இக்கதையில் வீரசிம்மன் தான் மணக்கவிருக்கும் ரத்னாபுரி சாம்ராஜ்யத்தின் இளவரசி நந்தினி தேவியை ஒற்றை கண் மாயாவி அவன் வேடத்திலேயே கவர்ந்து செல்கிறான். ஏழுகடல் தாண்டி, ஏழுமலை தாண்டி, குகையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இளவரசியை எப்படி மீட்கிறான் வீரசிம்மன்.. அவன் சந்திக்கும் சவால்களை தன் பறக்கும் குதிரை வல்லவன் உதவியோடு எப்படி சமாளிக்கிறான் என்பதை விறுவிறுப்பான நடையில் கூறுகிறார் ஆசிரியர். 


மிகவும் சிறிய குழந்தைகளின் உலகம் வேறு. அவர்களுக்கு தினமும் காணும் பொருட்களை வைத்து கதை சொல்வது தான் மனதில் பதியும். ஆனால் சற்று வளர்ந்த குழந்தைகளின் கற்பனை உலகமே வேறு. அவர்கள் உலகம் சாகச அதிரடி கதைக்களங்களையே விரும்பும். அப்படிப்பட்ட சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு ஏற்ற கதை புத்தகம்தான் இது. நிச்சயம் இப்புத்தகத்தில் உள்ள மூன்று கதைகளும் அவர்கள் மனதிற்கு நெருக்கமானதாக, பிடித்தமானதாக இருக்கும். அதேபோல குழந்தைகளுக்கு கதை சொல்ல பெரியவர்கள் படிக்க ஏதுவாக இப்புத்தகம் இருக்கும். குழந்தைகளுக்கு பரிசளிக்கவும் மிகச் சிறந்த புத்தகம். 


இப்புத்தகம் புஸ்தகாவிலும், கிண்டில், அமேசான் தளங்களிலும் ஈ புத்தகமாகவும் கிடைக்கிறது. கண்டிப்பாக வாங்கி படித்து புதிய அனுபவத்தை பெறுங்கள் குழந்தைளே.


பத்மா சுப்பிரமணியம், 

திருநெல்வேலி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%