முப்பது வருடங்கள் முன்
அந்த மருத்துவமனை
அவளை வேலைக்குச்
சேர்த்தது!
அதன் பின்
அவள்தான் அந்த
மருத்துவமனையை
ராசியாக்கினாள்!
பிறந்த குழந்தைகளின்
முதல் அழுகை
அவள் காதில்தான் விழும்!
இறக்கும் மனிதர்களின்
கடைசி மூச்சும்
அவள் கையில்தான்
கரையும்!
தவிக்கும் உயிர்களுக்கு
நடுவே நின்று
தன் வாழ்க்கையைத்
தியாகம் செய்தாள்!
கால்கள் வீங்கியும்
கண்கள் எரிந்தும்
அவள் நின்ற இடம்
வார்டுதான்!
வலி அதிகரிப்போர்க்கு
அவள் புன்னகைதான்
முதல் மருந்து.
இன்று…
கணக்கு முடிப்பு
ஒருபுறம்!
அவள் பணிக்கு
விடுப்பு நிரந்தரம்!
வார்டின் கதவு
மெதுவாக மூடப்படுகிறது…
அதோடு
அவள் சேவையும்
வெளியேறுகிறது.
திரும்பிப் பாராது
நடக்க முயன்றாள்
ஆனால்
மருந்துகளின் வாசம்
ஈர்க்கின்றது
கண்ணீரோடு!
பணி ஓய்வு பெற்றாள்
அவள்
மருத்துவமனையின்
இதயத் துடிப்பு குறைந்தது!
இனி ஐ.சி.யூ.க்கு
மருத்துவமனையைத்தான்
அனுப்பவேண்டும்!

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?