news Breaking News
clock

ஒண்டிக்கட்டை

ஒண்டிக்கட்டை

அரசு அதிகாரி ஒண்டிக்கட்டை... கூடவே ரொம்ப வருடமாக ஒரு வயதான சமையல்காரரை வீட்டோடு வைத்து இருந்தார்.


தினம் வடை பாயசம், சிக்கன், மட்டன் என்று சாப்பாடு எப்பவும் தட புடலாக இருக்கும். அன்று ரிடயர்டு ஆகி விட்டார்.


வீடு வந்ததும் சமையல்காரரிடம், "இங்கே பாருப்பா.. நான் ரிடயர்டு ஆகிட்டேன் முழு சம்பளம் கிடையாது. வெறும் பென்ஷன் தான்.. அதனால் முன்பு போல் அடிக்கடி வடை பாயாசம், மட்டன், மீன் எல்லாம் வேண்டாம். தினம் ஒரு குழம்பு வைத்தால் போதும்... சரியா?" என்று சொல்ல அவரும் சரி என்று தலையை ஆட்டினார்.


தினம் ஒரு குழம்பு என்று வாழ்க்கை ஓடியது. பெரும்பாலும் அரசு அதிகாரி சாப்பிட்டு முடித்த பின் அப்புறமாக தான் அவர் சாப்பிடுவார்.


ஒரு நாள் சாப்பிட்டு முடித்த பின் சற்று ஓய்வு எடுத்தவர். சமையல் அறை சென்று பார்த்தவருக்கு ஆச்சரியம். அங்கே சமையல்காரர் மட்டன் பிரியாணி , பாயாசத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்க. "என்னய்யா போன வாரம் தானே சொன்னேன்.. இனி ஒரு குழம்பு சமைத்தால் போதும்னு.. அப்புறம் எதற்கு பிரியாணி என்று கேட்க.


அதற்கு சமையல்காரர் சிரித்துக் கொண்டே "ஐயா நீங்கள் தான் ரிடயர்ட் ஆகிட்டிங்க..., நான் இன்னும் வேலையில் தான் இருக்கேன்".. 


😳😳😳

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News