எஸ்ஐஆர்! சரிபார்ப்புக்கான ஆவணமாக 10 ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டை ஏற்க மறுப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பத்தாம் வகுப்பு நுழைவுச் சீட்டை சரிபார்ப்பு ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) சரிபார்ப்புக்கான ஆவணமாக பத்தாம் வகுப்பு நுழைவுச் சீட்டை (Admit Card - அட்மிட் கார்டு) ஏற்றுக் கொள்ளுமாறு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும், எஸ்ஐஆர் சரிபார்ப்புக்கான செல்லுபடியாகும் ஆவணமாக பத்தாம் வகுப்பு நுழைவுச் சீட்டை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
ஏற்கெனவே பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், வன உரிமைச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரிபார்ப்பு ஆவணங்களாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
--------------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?