news Breaking News
clock

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா: ‘இஸ்ரோ’ தலைவர் டாக்டர் நாராயணன், டைரக்டர் கே.பாக்யராஜூக்கு கவுரவ டாக்டர் பட்டம் வேந்தர் ஏ.சி. சண்முகம் வழங்கினார்

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா: ‘இஸ்ரோ’ தலைவர் டாக்டர் நாராயணன், டைரக்டர் கே.பாக்யராஜூக்கு கவுரவ டாக்டர் பட்டம்  வேந்தர் ஏ.சி. சண்முகம் வழங்கினார்



சென்னை, பிப். 5–


டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடி ஏ.சி.எஸ். மருத்துவமனையில் அமைந்துள்ள கன்வென்ஷன் அரங்கில் நடந்தது. அப்போது தேர்வில் வெற்றி பெற்ற 3750 மாணவ மாணவிகளுக்கு அவரவர் தேறிய படிப்புக்களில் பட்டங்கள் வழங்கப்பட்டது.


டாக்டர். அபிஜத் சந்திரகாந்த் ஷேத் (தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர்) பேசுகையில், அனைத்து துறைகளிலும முதலிடம் பிடித்த முது நிலை மற்றும் இளநிலைப் பட்டதாரி மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கி உரையாற்றினார்.


விழாவில் டாக்டர் வி.நாராயணன் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், பெங்களூர்) கே. பாக்யராஜ் (திரைப்பட இயக்குனர்) இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இருவருக்கும் வேந்தர் ஏ.சி.சண்முகம் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். பின் அவர் சிறப்புரையாற்றினார். தலைவர் அருண்குமார் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.


கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலாளர் ஏ.ரவிக்குமார் (துணைவேந்தர்), டாக்டர் எஸ். கீதாலட்சுமி (துணை தலைவர்), டாக்டர் எம்.கே. பத்நாபன் (இணை துணை வேந்தர்) டாக்டர்கள் எம். ரவிச்சந்திரன், சி.எஸ். ஜெயசந்திரன், டி.விஸ்வநாதன் ஜி.சி. கோதண்டன், என். வாசுதேவன் (திட்ட இயக்குனர்), ஏ.ஞானசேகரன் (விசேஷ அதிகாரி) (பதிவாளர் டாக்டர் பி.பழனிவேலு, பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News