எட்ஜ்பாஸ்டன் வெற்றி நினைவில் இருக்கும்’ - சொல்கிறார் கேப்டன் ஷுப்மன் கில்

எட்ஜ்பாஸ்டன் வெற்றி நினைவில் இருக்கும்’ - சொல்கிறார் கேப்டன் ஷுப்மன் கில்

பர்மிங்காம்:

இங்கிலாந்து அணிக்கு எதிராக பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 608 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தில் 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆகாஷ் தீப் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.


முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களும் விளாசிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்த வெற்றியால் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது போட்டி வரும் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.


பர்​மிங்​காம் வெற்​றிக்கு பின்​னர் பிசிசிஐ வெளி​யிட்​டுள்ள வீடியோ​வில் ஷுப்​மன் கில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த வெற்றி என் வாழ்​நாள் முழு​வதும் நான் போற்​றக்​கூடிய ஒன்​று. நான் ஓய்வு பெறும்​போதும் இது மிக​வும் மகிழ்ச்​சி​யான நினை​வு​களில் ஒன்​றாக இருக்​கும். இந்த போட்​டியை முடித்த விதம் திருப்​தி​யாக​வும், மகிழ்ச்​சி​யாக​வும் உள்​ளது. இன்​னும் மூன்று முக்​கிய​மான போட்​டிகள் உள்​ளன. அடுத்த ஆட்​டம் விரை​வில் நடை​பெற உள்​ளது. இது நல்​லது என்று நான் நினைக்கிறேன், ஏனென்​றால் எங்​களிடம் தற்​போது உத்​வேகம் உள்​ளது.


பந்து வீச்​சு, பேட்​டிங்​கில் அனை​வரும் பங்​களித்த விதம் மிகப்​பெரிய நேர்​மறை​யான அம்​சங்​களாகும். வெவ்​வேறு வீரர்​கள், வெவ்​வேறு சூழ் நிலைகளில் ஆட்​டத்தை முன்​னெடுத்​துச் சென்​றனர். நாங்​கள் விரும்​புவது இது​தான். இந்த செயல் திறன்​தான் சாம்​பியன் அணியை உருவாக்குகிறது. அந்த வகை​யில் வீரர்​கள் செயல்​பட்ட விதம் சிறப்​பானது” எனக் கூறி​யுள்​ளார்.


தொடர்ந்து வீரர்​களின் ஓய்​வறை​யில் ஷுப்​மன் கில் கூறும்​போது, “வெற்றி பெற நாம் மிக​வும் கடின​மாக உழைத்​துள்​ளோம். கடந்த ஆறு முதல் எட்டு மாதங்​களாக, ஒரு டெஸ்ட் வெற்​றியைப் பெறு​வது எவ்​வளவு கடினம் என்​பதை நான் அறிந்​திருந்​தேன், குறிப்​பாக நாம் இது​வரை ஒரு டெஸ்ட் போட்​டி​யிலும் வெற்றி பெறாத இடத்​தில் அதைச் செய்​வது என்​பது கடின​மானது.


அணி​யில் உள்ள ஒவ்​வொரு​வரை​யும் நினைத்து நான் பெரு​மைப்​படு​கிறேன். முதல் நாளி​லேயே இந்த ஆட்​டத்​தில் நாம் வெற்றி பெற வேண்​டும் என அனை​வரும் கூறினோம். அதி​லும் குறிப்​பாக இந்த மைதானத்​தில் வெற்றி பெற வேண்​டும் என நினைத்​தோம். அதற்​காக அனை​வரும் பங் களிப்பு செய்த விதம் சிறப்​பானது” என்​றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%