news Breaking News
clock

உலக மகளிர் தினம்..!!

உலக மகளிர் தினம்..!!




🧚‍♀️ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் பெருமளவில் சாதித்து வருகின்றனர். அனைவரின் வாழ்விலும் பெண் ஒரு மிகப்பெரிய அங்கமாக திகழ்கிறாள்.


🧚‍♀️பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள். அவர்களது சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும் படியாக சட்ட நடைமுறைகள் இன்று அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது இந்த சமுதாயம் சரியான பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது 


அன்பை பொழியும் அன்னையாகவும்..


அறிவை பெருக்கும் ஆசிரியையாகவும்..


அக்கறை செலுத்தும் சகோதரியாகவும்..


தோழமை காட்டும் தோழியாகவும்..


மனதோடு கரைந்துவிட்ட மனைவியாகவும்..


மகிழ்ச்சியை இறைக்கும் மகளாகவும்..


தந்தையான பின்பும்..


குழந்தையாய் பார்க்கும் பாட்டியாகவும்..


ஆண்களை சுற்றி...


பல பருவங்களிலும் உருவங்களிலும் நிறைந்திருக்கும் பெண்களை போற்றுவோம்...!!


உலக மகளிர் தின வரலாறு:


🧚‍♀️பெண்கள் முன்னேற்றம் மற்றும் சம உரிமையை மையமாக வைத்து கி.பி 1909ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதன்முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கொண்டாடினர்.


🧚‍♀️1911ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி முதன்முதலாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.


🧚‍♀️மகளிர் தினத்தை பெண்கள் மட்டும் கொண்டாடாமல் ஆண்களும் இணைந்து கொண்டாடினால்தான் அன்றைய நாள் முழுமை பெற்று, அவரவர் வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் மனம் மகிழ்ந்து வாழ்வார்கள். இத்தினமும் அவர்களுக்கு மறக்க முடியாத நினைவாக மாறும்.


குடும்பத்தில் பெண்களின் பங்கு:


🧚‍♀️ஒரு குடும்பம் என்று எடுத்துக்கொண்டால் வெளியில் வேலைக்கு செல்வது மட்டுமே ஆண்களின் மிகப்பெரிய பணியாக இருக்கிறது. ஆனால், பெண்கள் பணிக்கு செல்லாவிட்டாலும் அனைத்து இன்னல்களையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர்.


🧚‍♀️ஒரு குடும்பத்தை சீராக நடத்தும் திறமை பொதுவாக பெண்களுக்கே உரித்தான ஒரு சிறப்பம்சமாகும். ஆணின் கோபத்தையும், குழந்தைகளின் குறும்பு செயல்களையும், வயதானவர்களின் தேவையற்ற சொற்களையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் திறமை பெண்ணுக்கே உரியதாகும்.



மகளிரின் அதிகாரங்கள்:


🧚‍♀️பெண்கள் சுதந்திரமாகவும் மற்றும் அவர்கள் விரும்பிய இடத்தில் வாழவும், அவர்கள் விரும்பிய துறையை தேர்வு செய்து கல்வி கற்கவும், அவர்களுக்கு விரும்பிய துறையில் வேலை செய்யவும், ஆண்களுக்கு நிகராகவும், அதை விட அதிகமாக சம்பாதிக்கவும் அங்கீகாரம் இன்று வழங்கப்பட்டுள்ளது.


🧚‍♀️அன்றுபோல் இல்லாமல் ஆண்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தனை அதிகாரங்களும் இன்று பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுவே பெண்களுக்கான சம உரிமையை வழங்கியதற்கான சான்றாக விளங்குகிறது.


🧚‍♀️இதன் மூலம் பழமையான கோட்பாடுகள் மற்றும் சமூக வழக்கங்களை காரணமாக கொண்டு பெண்களை அடக்குமுறை செய்வது தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.


"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல


மாதவம் செய்திடல் வேண்டுமம்மா"


அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு:


🧚‍♀️இன்றைய சமூகத்தில் பெண்கள் தங்கள் திறமைகளை அனைத்து துறைகளிலும் வெளிப்படுத்துகின்றனர். இப்போதுள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்று சாதனை படைத்துள்ளார்கள். முக்கியமாக விளையாட்டு, அரசியல், ஆசிரியர், அலுவலக பணிகள், விமானத்துறை, கப்பல்துறை, காவல்துறை போன்ற பல முக்கிய துறைகளில் சாதித்து வருகின்றனர்.


🧚‍♀️ஆண்கள் மட்டுமே அனைத்து துறையிலும் பணிபுரிந்து வந்த நிலை மாறி ஆண்களுக்கு நிகராகவும், ஆண்களை விட உயர் பதவியிலும் பெண்கள் பணிபுரியும் அளவிற்கு தற்போதைய தலைமுறை வளர்ந்துள்ளது. 


🧚‍♀️அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழமொழிக்கேற்ற நிலையில் இருந்த பெண்களின் நிலைமை, கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழிக்கேற்ப மாறியுள்ளது மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.



பெண்கள் நாட்டினுடைய கண்கள்:


🧚‍♀️பெண்களே நம் நாட்டினுடைய கண்கள்.. என்று பெண்களை எப்போதும் ஆண்களுக்கு நிகராக பார்த்தோம் என்றாலே போதும் பெண்களுக்கு கண்டிப்பாக சம உரிமை கிடைக்கும்.


🧚‍♀️எனவே நம் நாட்டின் கண்களான பெண்களை காத்து.. மரியாதையுடன் தாய்மையை போற்றிடுவோம்...


தேவைப்படும் மாற்றம்:


🧚‍♀️பல இடங்களில் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அனைத்து துறைகளிலும் சாதித்து வந்தாலும், சில இடங்களில் பெண்ணடிமைத்தனம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற பல சம்பவங்கள் நடந்துதான் வருகின்றன.


🧚‍♀️இதனை முற்றிலும் ஒழித்து புதுமையான மற்றும் சமமான சமுதாயம் அனைவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்... பெண்களுக்கு தலைவணங்கி... என்றும் தாய்மையை போற்றிடுவோம்..


 இனிய உலக மகளிர் தின வாழ்த்துக்கள்...!!


Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News