*01.01.2026 வியாழக்கிழமை முதல் 07.01.2026 புதன்கிழமை முடிய ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் செங்கரைப்பாளையம் மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோவிலில் "உலக அமைதி வாரவிழா" நடைபெற்று வருகிறது.*
*முதல் நாள் நிகழ்வாக "வருடமெல்லாம் வசந்தம்" என்னும் தலைப்பில் பேராசிரியர் கோ.சரவணன் அவர்கள் 01.01.2026 வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை சொற்பொழிவு ஆற்றினார்.*
*விழாவிற்கு மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திரு வி.பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்*
*திரு எம்.மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அறக்கட்டளை பொருளாளர் திரு சி.மனோகரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.*
*முன்னதாக பேராசிரியர் ஆர்.பாலமுருகன், பேராசிரியர் பூமலர் ஆகியோர் இறைவணக்கம், குரு வணக்கம், தவம் முதலியன நடத்தினர். அருகாமையில் உள்ள பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த மனவளக்கலை பயின்ற அன்பர்கள் மற்றும் பெண்கள், ஆண்கள் என இருபால் அன்பர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். "உலக நல வாழ்த்து" பாடலுடன் விழா இனிதே நிறைவுற்றது.*
*நன்றி! வணக்கம்!*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?