news Breaking News
clock

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்


 

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக பதவியேற்றார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக பதவி வகித்த பி.ஆர். கவா​யின் பதவிக் காலம் நேற்​றுடன் நிறைவடைந்​தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக சூர்யகாந்த் இன்று பதவி​யேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில், அவருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பதவிப்பிர​மாண​மும் ரகசிய காப்பு பிர​மாண​மும் செய்து வைத்தார். அரசியலமைப்பை காப்பேன் என்றும், கடமைகளை உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும் இந்தியில் கூறி சூர்யகாந்த் பதவியேற்றார். இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


 கடந்த 1962-ம் ஆண்டு பிப்​ர​வரி 10-ம் தேதி ஹரி​யா​னா​வின் ஹிசார் பகு​தி​யில் சூர்யகாந்த் பிறந்​தார். ஹிசா​ரில் பள்​ளிப் படிப்​பு, கல்​லூரி படிப்பை நிறைவு செய்த அவர் ரோத்​தக் மற்​றும் குருஷேத்​திரா பல்​கலைக்​கழகத்​தில் எல்​எல்​பி, எல்​எல்​எம் சட்​டப் படிப்​பு​களை படித்​தார்.


கடந்த 1984-ம் ஆண்​டில் ஹிசார் மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞ​ராகபணியை தொடங்​கி​னார். பின்​னர் பஞ்​சாப்​-ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞ​ராக பணி​யாற்​றி​னார். கடந்த 2000-ம் ஆண்​டில் ஹரி​யானா அட்​வகேட் ஜென​ரலாக அவர் நியமிக்​கப்​பட்​டார். கடந்த 2004-ம் ஆண்​டில் பஞ்​சாப்- ஹரி​யானா உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பதவி​யேற்​றார். கடந்த 2018-ம் ஆண்​டில் இமாச்சல பிரதேச தலைமை நீதிப​தி​யாக பொறுப்​பேற்​றார். கடந்த 2019-ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யாக அவர் பதவி​யேற்​றார்.


1,000 வழக்​கு​களில் தீர்ப்பு: உயர் நீதி​மன்​றம் முதல் உச்ச நீதி​மன்​றம் வரை சுமார் 1,000 வழக்​கு​களில் அவர் தீர்ப்பு வழங்கி உள்​ளார். குறிப்​பாக 370-வது சட்​டப்​பிரிவு, தேசத்​துரோக சட்​டம், பெகாசஸ் வழக்​கு, பிஹார் எஸ்​ஐஆர் வழக்​கு​களில் அவர் முக்​கிய தீர்ப்​பு​கள், உத்​தர​வு​களை பிறப்​பித்​துள்​ளார்.


டெல்​லி​யில் கடந்த சனிக்​கிழமை நீதிபதி சூர்​ய​காந்த் பேசி​ய​போது, “நவம்​பர் 24-ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிப​தி​யாக பதவி​யேற்க உள்​ளேன். எனது பதவிக் காலத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களுக்கு முன்​னுரிமை கொடுப்​பேன். நாடு முழு​வதும் பல்​வேறு நீதி​மன்​றங்​களில் ஏராள​மான வழக்​கு​கள் தேங்கி உள்​ளன. இந்த எண்​ணிக்​கையை குறைக்க நடவடிக்கை எடுப்​பேன்" என்று தெரி​வித்​தார். புதிய தலைமை நீதிப​தி​ சூர்ய காந்​துக்கு சவிதா என்​ற மனை​வி​யும்​ முக்​தா, கனுபிரி​யா என்​ற இரு மகள்​களும்​ உள்​ளனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News