ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி கண்டுபிடிப்பு: வேளாண் பல்கலைக்கழகத்துக்கு காப்புரிமை
Dec 28 2025
13
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி தயாரிப்பு முறைக்காக காப்புரிமை பெற்றுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமை முனைவர் ஜக்கு பிரசன்னா, முனைவர் எஸ்.மாரிமுத்து, முனைவர் கோள்ளா கவுதம் மற்றும் முனைவர் காதிரவன் சண்முகநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
'அட்ரசின்' என்னும் களைக்கொல்லி சோளம், மக்காச்சோளம் மற்றும் கரும்பு போன்ற பயிர்களில் களைகளை கட்டுப்படுத்த பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த களைக்கொல்லி மண்ணில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது.
எனவே இந்த நச்சுப்பொருள் குறிப்பாக பாசன வசதி கொண்ட வயல்களில் இருந்து வெளியேறி நிலத்தடி நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மானாவாரி நிலங்களில் இந்த களைக்கொல்லியை பயன்படுத்தும் போது அவற்றின் செயல்திறன் மழை பொழிவையே சார்ந்துள்ளது. மழை குறைந்தால் இந்த களைக்கொல்லி ஆவியாகி வெளியேறிவிடும் அதே சமயம் மழை அதிகம் பெய்தால் அது மண்ணுக்கு அடியில் சென்று செயலிழக்கும்.
மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணா வேளாண் நானோ தொழில்நுட்ப மையத்தில் முனைவர் பட்ட மாணவர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த நானோ களைக்கொல்லி உருவாக்கப்பட்டுள்ளது. பாசன வயல்களில் இந்த நானோக் களை கொல்லி மெதுவாக வெளியேறி களைகளை கட்டுப்படுத்துவதால் அவைகள் வயல்களிலிருந்து வெளியேறுவது தவிர்க்கப்பட்டு நிலத்தடி மாசுபாடு தடுக்கப்படுகிறது. மானாவாரி நிலங்களில் இந்த நானோ களைக்கொல்லிகளை பயன்படுத்தும்போது இவைகள் மழை பெய்யும் வரை ஆவியாகாமலும் ஒளி மற்றும் நுண்ணுயிர் சிதைவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. எனவே இவைகள் நீண்ட நாட்களுக்கு வயலில் தங்கி களைகளை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?