இளமனூரில் 'மொழி ஞாயிறு' தேவநேயப்பாவாணர் நூலகம் திறப்பு விழா

இளமனூரில் 'மொழி ஞாயிறு' தேவநேயப்பாவாணர் நூலகம் திறப்பு விழா



   மதுரை, இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேனிலைப் பள்ளியில் இன்று ( 08-07-2025) 'மொழி ஞாயிறு' தேவநேயப்பாவாணர் நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இளமனூர் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரும் ஓய்வு பெற்ற துணை இயக்குநருமான தெய்வகன்னி தலைமை வகிக்க, தலைமையாசிரியை கனகலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பெரும்புலவர் சன்னாசி கலந்து கொண்டு பாவாணர் நூலகத்தைத் திறந்து வைத்து, பாவாணர் செய்த தமிழ்த்தொண்டினைக் கூறினார். தியாகராசர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.காந்திதுரை, பட்டிமன்ற நடுவர் கவிஞர் மூரா, அக்ரி ஆறுமுகம், காப்பாளர் சங்கரசபாபதி, தமிழாசிரியர்கள் முருகேசன், மணி மீனாட்சி சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்கள். பாவாணரின் கொள்ளுப்பேரன் சீவாப்பாவணர் என்ற சோழன் பாவாணரின் நூல்கள் அனைத்தையும் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். பாவாணரின் பெயரில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. தலைமையாசிரியர்கள் முனியாண்டி, அல்லிமுத்து, பரிமளா, தண்ணாயிர மூர்த்தி, பொறியாளர்கள் நவசக்தி, கிருஷ்ணமூர்த்தி, சக்கிமங்கலம் பாண்டிய ராஜா, ஆண்டார் கொட்டாரம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பாலமுருகன் தமிழாசிரியர்கள் ரகமத்துல்லா, மனோகரன், நாகேந்திரன், சக்திகுமார், சுப்ரமணி, கருப்பசாமி, மணிராமன், ஜான்பெல்சியா மேரி, கலைச்செல்வி, கிருஷ்ணவேணி, லீலாரோஸ் மணிமேகலை, கவிதா ஆசிரியர்கள் மோசஸ் மங்களராஜ், பீட்டர் ஆரோக்ய ராஜ், சரவணன், சத்தியசீலன், இராஜம்மாள், சரஸ்வதி, கவிஞர்கள் மலர்மகள், மஞ்சுளா தொழிலதிபர்கள் மோகன், வினோத் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ரவி செய்தார். உடற்கல்வி ஆசிரியர் முத்துராசா நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%