
அகவற்பா!
இருளே சூழ்ந்த
இரவு நேரம்
கருமை சூழ்ந்தே
காணும் நேரம்!
சூரியன் மறைந்ததும்
சீர்மைக் காலை
வரும்வரைதோன்றும்
வண்ணக் காலமே!
அந்தி எனலாம்
யாமம் எனலாம்
சந்தியாக் காலம்
என்பரே சார்ந்து!
கங்குல் என்பர்
காணும் இரவை
மங்குல் என்பர்
மாண்பாம் இரவை!
இரவு இனிமை
சூழ்ந்த தெனலாம்
இருளைக் கொண்ட
இரவே வாழ்கவே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%