
கனவுகளில்
விண்ணில்
மிதக்கலாம்...
வியர்வை இன்றி
விளைச்சல் பார்க்கலாம்...
அயர்வை சந்தியாது
ஆனந்தம் கொள்ளலாம்...
கண்ணீர் வடிக்காமல்
காரியம் முடிக்கலாம்
விழித்து விட்டால்
மனத்திரையில் ஓடிய
அவையாவும்
வெளிச்சமே இல்லாத
வெறும் படமாய் வீழ்ந்து விடும்...
விழலுக்கு இறைத்த
நீராயும்
நிறம் மாறிப் போகும்
ஆகவே
கனவுலகில் மிதந்து
விண்மீன்கள் பிடித்தது
போதும் போதும்..
எழுச்சி நாயகனே
என்னினிய இளைஞனே!
களத்தில் இறங்கி
காரியத்தில்
கடும் நெருப்பாய்
இறங்கும் போது
கண்ணீர் சகஜம்
காயங்கள் சகஜம்
காலன் வருகையும் சகஜம் தான்... ஆனால்
தளராமல்
தணியாமல்
தலை குனிந்தாலும்
தாழாமல்
தாக்குப் பிடித்து நின்றால்
தரணியாளும் தகுதி
உனக்கே உனக்குத்தான்!
ஆகவே
போராடும் குணத்தை
மட்டும்
இறுதி வரை
எஃகாய் பற்றிக் கொள்
எத்திசையும் உனக்குத் தான்...!
உச்சம் தொடும் வரை
எழுவதும் விழுவதும்
வெறும் எண்ணிக்கை
இல்லை...
அவையெல்லாம்
மண்ணில்
விண்ணைப் படைக்கும்
வித்தைக்கான
வீரிய அஸ்திவாரம்...!
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?