பிதாவின் விருப்பத்தில்
யோசேப் அறியாமலே
கன்னி மேரி
கருவுற்ற அமிர்தன்!
இஸ்ரவேலின் ராஜாவாக
விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்த அமலன்!
மாட்டுத் தொழுவத்தில் சனித்து தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்ந்த அதிகன்!
கிழக்கில் உதித்த நட்சத்திரம் பெத்லகேம் மாட்டுத் தொழுவம் வரை வழிகாட்டிய அற்புதன்!
பாவிகளும், புண்ணியர்களும்
பரந்து விரிந்து
உரக்கச் சொல்லி
உயர்த்தும் அதீத தேவன்
தேவ மைந்தனை சாஷ்டாங்கம் செய்வீர்!
குழந்தை ஏசுவை மகிமைப் படுத்துவீர்; மண்ணவரே!
விண்ணின் மைந்தனுக்கு;
அல்லேலுயா! அல்லேலுயா!

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%