பாவலர் கருமலைத்தமிழாழன்
சலசலவென்று ஓடுகின்ற சின்ன ஓடை
சரிவான வயல்களிலே பச்சைப் பட்டாய்
நிலமகளைப் போர்த்திருக்கும் பயிரின் ஆடை !
நிழல்பரப்பும் ஆலமரக் கிளையில் தாவி
வலயவரும் மந்தியொடு கடுவன் கூட்டம் !
வளைந்திருக்கும் தென்னைமரக் கீற்ற சைத்துக்
கலகலவென்று ஒலியெழுப்பி வீசும் காற்றில்
கலந்துவரும் மண்வாசம் நெஞ்சை ஈர்க்கும் !
மாந்தோப்பில் பழுத்திருக்கும் பழங்கள் கொத்தி
மதுரமொழி பேசுகின்ற கிளிகள் பேச்சும்
தீந்தமிழின் இனிமையினைக் குரலில் தேக்கித்
தீம்பாகாய்க் கூவுகின்ற குயில்கள் பாட்டும்
நீந்துகின்ற மீன்துள்ளும் குளக்க ரையில்
நீளலையால் அசையும் தாமரையின் தேனை
மாந்துதற்கே ரீங்காரம் இசைக்கும் வண்டும்
மனம்தன்னை இன்பத்தில் மூழ்கச் செய்யும் !
ஏற்றத்தில் காளையர்கள் நீரைப் பாய்ச்ச
ஏந்திழையார் வரிசையாகக் கழனிச் சேற்றில்
நாற்றுநடும் வேலையிடைப் பாட்டுப் பாட
நண்டுகளும் வளைவிடுத்தே வரப்பில் ஏற
காற்றினிலே மாசின்றி மரங்கள் சூழ்ந்த
கவின்கொஞ்சி கண்களுக்கு மகிழ்ச்சி சேர்க்கும்
போற்றிநாமும் இயற்கையை அழியாமல் காப்போம்
பொல்லாத நோயின்றிச் சுகமாய் வாழ்வோம் !
இயற்கைப் போற்றுவோம்