சிவகங்கை அருகே அமைந்துள்ள இந்தோ–திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில், 44 வார கால அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 1,244 வீரர்கள் பணிக்கு செல்லும் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. சிவகங்கையை அடுத்த இலுப்பகுடி கிராமத்தில் அமைந்துள்ள இந்த பயிற்சி மையம், 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தேர்வு செய்யப் படும் வீரர்களுக்கு உடற்பயிற்சி, ஆயுதம் கையாளுதல், களப் பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல், அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் 44 வார காலத்திற்கு வழங்கப்பட்டு, அதன் பின்னர் இந்திய எல்லைப் பகுதிகளில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், 495-வது பிரிவைச் சேர்ந்த பயிற்சி வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்ததையடுத்து நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த வீரர்கள் தேசி யக் கொடியை ஏந்தி வீரநடை போட்டு அணிவகுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் ஐ.ஜி. மனு மகா ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, துப்பாக்கிச் சுடுதல், ஆயுதம் கையாளுதல், அணிவகுப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 6 வீரர்களுக்கு பதக்கங் களை வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து, வீரர் களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி, காவல் துணைத் தலைவர் டி.ஜஸ்டின் ராபர்ட் தலைமையில் நடை பெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?