"குருவே, என் வாழ்க்க்கையில் மகிழ்ச்சியே இல்லை" என்று குருவிடம் சிஷ்யன் வருத்தப்பட்டான். குரு, அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே வண்ண பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. "இதோ இவற்றில் ஒன்றை பிடித்துக்கொண்டு வா" என சிஷ்யனிடம் குரு சொன்னார். பட்டாம்பூச்சிகளைத் துரத்திக்கொண்டு ஓடினான். ஆனால் ஒன்றைக்கூட அவனால் பிடிக்க முடியவில்லை. "பரவாயில்லை..வா. நாம் இந்த தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்" என்று அவனை தோட்டத்தின் நடுவே அழைத்து வந்தார். இருவரும் அமைதியாக நின்றுகொண்டு தோட்டத்தின் அழகை கண்கள் விரிய கண்டு களித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் பட்டாம்பூச்சிகள் பல அவர்களைச் சுற்றி பறக்கத் தொடங்கின. மேலும், இரு பட்டாம்பூச்சிகள் அவன் கைகளிலேயே வந்தமர்ந்தன. குரு சிரித்துக்கொண்டே கூறினார்.
"இதுதான் வாழ்க்கை.. மகிழ்ச்சியைத்தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. வாழ்க்கையை அமைதியாக நின்று ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடமே தானாக வந்து சேரும்."
சிவ.முத்து லட்சுமணன்
போச்சம்பள்ளி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?