news Breaking News
clock

இசிஐ நெட் செயலியை மேம்படுத்த பொது மக்கள் ஆலோசனை வழங்கலாம்

இசிஐ நெட் செயலியை மேம்படுத்த பொது மக்கள் ஆலோசனை வழங்கலாம்


 

சென்னை: தேர்தல் கமிஷனின், 'ECiNet' என்ற மொபைல் போன் செயலியை, எளிதாக அனைவரும் பயப்படுத்தக்கூடிய வகையில் மாற்றியமைக்க, பொது மக்கள் ஆலோசனை வழங்கலாம்.


இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனின் உதவி இயக்குநர் அபூர்வா குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:


தேர்தல் கமிஷனின், 'இசிஐ நெட்' எனும் மொபைல் போன் செயலியை, எளிதாக அனைவரும் பயப்படுத்தக்கூடிய வகையில் மாற்றியமைக்க, பொது மக்கள் ஆலோசனை வழங்கலாம்.


பொது மக்கள் அனைவரும் இச்செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள, 'சப்மிட் சஜ்ஜசன்' வசதி வாயிலாக, டிச., 27ம் தேதி வரை பரிந்துரைகளை வழங்கலாம்.


மேம்படுத்தப்படும் சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் சோதனை முயற்சியாக, இந்த செயலி பயன்படுத்தப்பட்டது.


இதனால் வாக்காளர் சேவைகள் மேம்படுத்தப்பட்டதுடன், ஓட்டுப்பதிவு சதவீத விபரங்கள் விரைவாக வெளியிடப்பட்டன.


பீஹார் தேர்தல் அனுபவங்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், களப்பணியாளர்கள் வழங்கிய கருத்துக்கள், இச்செயலியின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.


மக்கள் வழங்கும் அனைத்து பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டு, இச்செயலி பயனருக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படும். ECINet தளம், வரும் ஜனவரியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


ஒரே தளம் வாக்காளர் வசதி மற் றும் தேர்தல் செயல்முறை களின் வெளிப்படைத் தன்மையை தொழில்நுட்பம் வாயிலாக வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இச்செயலி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய முயற்சிகளில் ஒன்று.


இச்செயலியில், மக்கள் பயன்பாட்டிற்கான ஒருங்கிணைந்த வாக்காளர் உதவி மையம், ஓட்டு எண்ணிக்கை, வேட்பாளர் விபரங்கள் தொடர்புடைய செயலிகள், இணையதளங்கள் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News