ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோத சுரங்கத்தால் பெரும் பாதிப்பு: உச்சநீதிமன்றம்
Jan 23 2026
17
ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகள் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இயற்கை எழில்மிகு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஆரவல்லி மலைத் தொடா் குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும், தில்லி யூனியன் பிரதேசத்திலும் பரவியுள்ளது.
இந்நிலையில், உள்ளூா் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தை உடைய மலை ‘ஆரவல்லி மலை’ என்றும், 500 மீட்டருக்கு இடைப்பட்ட இரண்டு அல்லது இரண்டுக்கும் அதிகமான, 100 மீட்டா் உயர மலைகளை ‘ஆரவல்லி மலைத் தொடா்’ என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த நிபுணா் குழு புதிய விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு கடந்த ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் 100 மீட்டருக்கு கீழுள்ள மலைப் பகுதிகளில் சுரங்கப் பணிகள் நடைபெறும் எனவும், நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு பாலைவன நிலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்பட பலரும் எச்சரித்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆரவல்லி மலைத் தொடரின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்காக, அங்கு சுரங்கப் பணிகளுக்கான புதிய குத்தகைகளை வழங்க மாநில அரசுகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பா் 24- ஆம் தேதி உத்தரவிட்டது.
இருப்பினும், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து டிசம்பா் 29-ஆம் தேதி மீண்டும் விசாரித்தது. அப்போது ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடா் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழு அளித்த பரிந்துரைகள், அதை ஏற்று உச்சநீதிமன்றம் நவம்பா் 20-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது ஆரவல்லி மலை மற்றும் மலைத் தொடா் குறித்து புதிய விளக்கத்துக்கு ஏற்கெனவே விதித்த இடைக்காலத் தடை உத்தரவை நீதிபதிகள் நீட்டித்தனா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?