
டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி சென்னை, ஜூலை 11- சென்னையில் செய்தியா ளர்களைச் சந்தித்த தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் ‘ஆபரேஷன் அறம்’ மூலம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில், “நீண்ட காலமாக தலை மறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க ‘ஆபரேஷன் அறம்’ நடை பெற்றது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாட காவில் பதுங்கியிருந்த டெய்லர் ராஜாவை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்பு படை கைது செய்து உள்ளது”என்றார். அபுபக்கர் சித்திக் மீது தமிழ கத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் இரு வழக்குகளும், கர்நாடகா, ஆந்தி ராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. 2 ஆவது குற்றவாளி முகமது அலி மீது 1999இல் குண்டு வெடிப்பு சம்பவம் உள்பட 7 வழக்குகள் உள்ளன. இவர் ஆந்திராவின் கடப் பாவில் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். குற்றவாளிகள் கைது செய்யப் பட்ட 24 மணிநேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டும். அதன்பிறகு, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆனால், முதற்கட்ட விசாரணையிலேயே, தலைமறைவாக இருந்தவர்கள் மளிகைக் கடை, தையல் கடை, துணிக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் செய்து வந்துள்ளனர். டெய்லர் ராஜாவுக்கு மட்டும் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. மற்ற இருவருக்கும் எந்த அமைப் புடனும் தொடர்பில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். பல ஆண்டு களாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையவர். பயங்கரவாத எதிர்ப்புப் படையில் 181 அதிகாரி கள் உள்ளனர். 2012 வரை அபுபக்கர் சித்திக் தொடர்ந்து குற்றங்களை செய்து வந்தார். கைது செய்யப்பட்ட வர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். பயங்கரவாத தடுப்பு படை வெற்றி கரமான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார். கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். வரும் காலங்களில் தமிழ கத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரு கிறது என்றும் சங்கர் ஜிவால் தெரி வித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?