அவள் நிதமும் எண்ணத் துவங்கினாள்...
இவ்வுலகில் ஆண் பிறவி தான் மகிழ்ச்சி நிறைந்தது.ஆண் இனம் என்றால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரமாக வாழலாம்... இறைவா என்னையும் ஆணாக மாற்றிவிடு....
பிரம்மனின் அறிவுறுத்தல்படி அவள் ஆணாக மாற்றமடைந்தா(ன் )ள்...
புதிய நண்பர்கள் கூட்டம் அறிமுகமானது...
சிலர் புகைக்க கட்டாயப்படுத்தினர்.
'என்னடா நீ தம் அடிக்காத லைஃப் ஒரு லைஃபா !"
சிலர் மது அருந்த அழைப்பு விடுத்தனர்
"ஒரு டைம் ஒரே ஒரு கட்டிங் விட்டுப் பாறேன் அப்புறம் நீ அதை விட மாட்ட... !"
சிலர் போதை மாத்திரைகளை உட்கொள்ள அழைப்பு விடுத்தனர் !
"இது ஒன்னு போட்டா மட்டும் போதும் சொர்க்கமே நமக்கு தெரியும்... !"
இதில் எல்லாம் சிக்குண்டு நண்பர்கள் கூட்டத்திலிருந்து தப்பிப்பது அவளுக்கு மிக கடினமாக இருந்தது
அப்போதுதான் அவள்(ன்) சிந்தித்தா(ள் )ன்...
இவ்வுலகில் ஆண் வம்சத்தை கெடுக்க பல தீய வழிகளும் உள்ளது....
அதில் சிக்குண்டு வாழாமல் தப்பித்து ஆண்கள் வாழ்வது மிகக்கடினமே என உணர்ந்தாள் !
போதும் இந்த ஆண் பிறவி.....
இறைவனை மீண்டும் வேண்டினாள் அவள் !
_________________________
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?