ஆடி 3ம் வெள்ளியை முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம், பறக்கும் காவடி, அம்மன் உற்சவம் மற்றும் தீமிதி விழா!

வேலூர், ஆக. 5-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தட்டப்பாறை அடுத்த மாரியம்மன் பட்டி கிராமத்தில் ஆடி மாதம் 4,ம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தட்டப்பாறை கிராமத்திலிருந்து அப்பகுதி பொதுமக்கள் 108 பால்குடங்களை தலையில் சுமந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்ய ஊர்வலமாகச் சென்றனர். இதையடுத்து வண்ண வண்ண பூக்களால் மாரியம்மனை அலங்கரித்து சிறப்பு பூஜைகளை செய்தனர். மேலும் பொதுமக்கள் பிரார்த்தனை செய்திருந்தவாறு, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்ய முக்கிய வீதிகளில் எலுமிச்சம் பழம், வேல் அலகு குத்தி
ஜேசிபி எந்திரம் மேலே முதுகில் அலகு குத்தி தலைகுப்புற கவிழ்ந்தபடி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இவ்விழாவில் ஊர் நாட்டாண்மை தேவராஜ், ஊர் கவுண்டர் தரணி, மேட்டுக்குடி குமார், பிச்சாண்டி, தர்மகத்தா ராமமூர்த்தி, பெரியதனம் சங்கர், அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் சிவா, பால்குட உபயம் சிட்டிபாபு, பரந்தாமன், ஜெயபிரகாஷ், கருணாகரன் ஆச்சாரி , விழா குழுவினர்கள் கருணாநிதி, நாகராஜன், தசரதன், கோவிந்தசாமி, மாரிமுத்து, பரசுராமன், தாமோதரன், சாமிநாதன், வெங்கடேசன், கன்னியப்பன், கோவிந்தன், குணா ,ரவி, பொன்னரசன் குமரவேல், ராமராஜன், கோடீஸ்வரன், உலகநாதன், கல்கி, அன்பு, இளங்கோ, மணிகண்டன், ஜெகன், தரணி, மாதேஷ் என திரளாக அனைவரும் கலந்து கொண்டு வெகுவிமரிசையாக தீமிதி திருவிழா நடைபெற்றது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?