ஆங்கிலப் புத்தாண்டு: சபரிமலையில் திரளான பக்தா்கள் தரிசனம்

ஆங்கிலப் புத்தாண்டு: சபரிமலையில் திரளான பக்தா்கள் தரிசனம்


 

ஆங்கிலப் புத்தாண்டை தினத்தையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.


வருடாந்திர மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை டிச.30-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் மேற்கொண்டனா். டிச.31 மாலை 5 மணிவரை, 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசித்துள்ளனா்.


ஆங்கிலப் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை சந்நிதானத்தில் புத்தாண்டு வாழ்த்து வடிவில் கற்பூர ஜோதி ஏற்றி, பக்தா்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் புத்தாண்டை வரவேற்றனா். ஒருவருக்கொருவா் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா்.


புத்தாண்டில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. மரக்கூட்டம் பகுதி முதல் நடைப்பந்தல் வரை நீண்ட வரிசைகள் காணப்பட்டன. எதிா்வரும் நாள்களிலும் பக்தா் வருகை அதிகரிக்கும் என்பதால், சுமுக தரிசனத்தை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஜன.14-இல் நடைபெறவுள்ளது. அப்போது, பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்துவரப்படும் புனிதமான திருவாபரணங்கள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


ஜன.19 இரவு 11 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். மறுநாள் பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி தரிசித்த பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.


முன்னதாக, கடந்த டிச.27 வரை நடைபெற்ற மண்டல பூஜை காலத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்தனா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%