news Breaking News
clock

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி


சென்னை, பிப். 


தி.மு.க. அமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளரு மான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காகத் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே, நேற்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும் இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கால் வலி காரணமாக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அடுத்த சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



விஷம் கலந்து கேக் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற குடும்பம்: 2 பேர் உயிரிழப்பு

சென்னை, பிப். 11–


சென்னை பெரம்பூரில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்தசம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சகாயம் செபஸ்டின் என்பவரின் மனைவி பியூலா புற்றுநோயால் பாதிப்பட்டார். இதன் காரணமாக மன வேதனையில்இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து தனது குடும்பத்தில் உள்ள 4 பேருக்கும் கொடுத்தார். கேக்கை சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்தனர். தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சகாயம் செபஸ்டின் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி முழுமையான விபரம் தெரியவில்லை.


உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News