அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள்

அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும்  ஐரோப்பிய நாடுகள்

கடந்த ஜூன் மாதம் வரலாற்றில் இல்லாத அளவு அதிக வெப்பத்தை மேற்கு ஐரோப்பா எதிர் கொண்டுள்ளது என ஐரோப் பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு அமைப்பான கோபர்நிகஸ் தெரிவித்துள்ளது. மேலும் உலக அளவில் அதிக வெப்பத்தை எதிர் கொண்ட மூன்றாவது மாதமாக 2025 ஜூன் மாதம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. உலக சரா சரியை விட பல மடங்கு வேகமாக ஐரோப்பா வெப்பமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் அதிக தடைகள் : ரஷ்யாவை மிரட்டும் அமெரிக்கா


உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்துள்ள துடன் ரஷ்யா மீது அதிக தடைகளை விதிக்க பரிசீலித்து வருகிறார் டிரம்ப். இதனை செய்தி யாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரத்தில் தங்கள் இலக்குகளை உறுதியாக அடைவோம் என ரஷ்யா அறிவித்துள் ளது. இதனால் அதிருப்தி தெரிவித்திருந்த டிரம்ப் தற்போது ரஷ்யாவிற்கு எதிரான நட வடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.


டிரம்ப்பை சந்தித்த ஆப்பிரிக்க தலைவர்கள் 


செனகல், லைபீரியா, கினியா-பிசாவ், மவுரித்தேனியா, காபோன் ஆகிய ஐந்து ஆப்பிரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள் டிரம்ப்பை சந்தித்து வணிகம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறை சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். அரிய கனிமங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


பிரான்சும் இங்கிலாந்தும் ஐரோப்பாவை காப்பாற்றும்?


பிரான்சும் இங்கிலாந்தும் ஆபத்தான உலகில் ஜனநாயகம், சட்டம் மற்றும் சர்வதேச ஒழுங்கை ஆதரிப்பதன் மூலம் “ஐரோப்பாவைக் காப்பாற்றும்” என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் பேசியுள்ளார். பிரான்சும் இங்கிலாந்தும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளையும் ராணுவ வீரர்களையும் கொடுத்து சர்வதேசச் சட்டங்களை மீறி ரஷ்யா-உக்ரைன் போரை தொடர்ந்து தூண்டி வருகின்றன. இந்நிலையில் தான் மக்ரோன் இவ்வாறு பேசியுள்ளார். 


சுற்றுலாவை ஊக்குவிக்கும் சீனா; 74 நாடுகளுக்கு விசா தேவையில்லை 


சீன அரசு தனது நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் விசா இன்றி பயணிக்கும் முறையை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது சுமார் 74 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி சீனாவிற்கு சுற்றுலாப் பயணி களாக வரலாம் என அறிவித்துள்ளது. இத்திட்டம் வரும் ஜூலை 30 முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 30 நாட்கள் வரை அந்நாட்டில் தங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%