அதிகாரம்

அதிகாரம்


அமர்ந்திருக்கும் நாற்காலியும்

ஆட்டிப்படைக்கும் அதிகாரமும் - 


இறைவன் கொடுத்த கொடை!

அது...

அடுத்தவர் கண்ணீரைத் துடைக்கவே அன்றி

உன் பையை நிரப்புவதற்கு அல்ல!


கையொப்பம் இடும் பேனா முனையில்

ஒரு ஏழையின் வாழ்வு இருக்கலாம்!

பணத்தையே குறிக்கோளாய் மாற்றினால்

அங்குக் கருணை எங்கே மிச்சமிருக்கும்?


சேர்த்து வைக்கும் மூட்டைகள்

செத்த பின் துணைக்கு வருவதில்லை!


நீ செய்த நல்லவை மட்டுமே - உன்

பெயரைச் சொல்லிப் பெருமைப்படும்!


அதிகாரம் என்பது - அடுத்தவனை

மிதிக்க அல்ல!

விழுந்தவனைத் தூக்கிவிடும் - ஒரு

பலமான கரங்கள் என உணர்வாய்!


வாய்ப்புக் கிடைக்கும் போது - கொஞ்சம்

மனிதாபிமானத்தைச் சிந்தித்துப் பார்!


பணம் தரும் சுகத்தை விட - ஒருவனின்

புன்னகை தரும் நிம்மதி பெரிதல்லவா?


அதிகாரத்தைப் பணிவோடு பயன்படுத்து,

அன்பு ஒன்றுதான் என்றும் நிலைக்கும்!

பண்பு மட்டுமே உன்னோடு வாழும்!


-----

ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%