விபத்தில் இருவர் உயிரிழப்பு: போதையில் காரை ஓட்டிய எஸ்எஸ்ஐ, காவலர் சஸ்பெண்ட்

விபத்தில் இருவர் உயிரிழப்பு: போதையில் காரை ஓட்டிய எஸ்எஸ்ஐ, காவலர் சஸ்பெண்ட்



எஸ்எஸ்ஐ ராஜேந்திரன்

கடலூர்: குடி போதை​யில் காரை ஓட்​டி, சாலை​யோரத்​தில் நின்ற 2 பேரின் உயி​ரிழப்​புக்கு காரண​மான எஸ்​எஸ்ஐ மற்​றும் காவலர் ஆகியோர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர். கடலூர் முதுநகர் அரு​கே​யுள்ள அன்​னவெளி அருந்​ததி நகரைச் சேர்ந்த வடிவேல் (35), பாஸ்​கர் (41), பெரிய காட்டு சாகை​யைச் சேர்ந்த ஜெய​ராஜ் (45) ஆகியோர் கட்​டிடத் தொழிலா​ளி​கள்.


இவர்​கள் மூவரும் நேற்று முன்​தினம் மாலை அன்​னவெளி பேருந்து நிறுத்​தம் அருகே நின்று கொண்​டிருந்​தனர். அப்​போது கடலூரில் இருந்து திட்​டக்​குடி நோக்​கிச் சென்ற கார் எதிர்​பா​ராத​வித​மாக அவர்​கள் மீது மோதி​யது.


இதில் வடிவேல், ஜெய​ராஜ் ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். அப்​பகு​தி​யில் ஹோட்​டல் நடத்தி வரும் மோகன் (60) என்​பவர் காயமடைந்​தார். விபத்தை ஏற்​படுத்​திய காரை ஆவினங்​குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்​வாளர் ராஜேந்​திரன் ஓட்டி வந்​துள்​ளார். அவருடன் காவலர் இமாம் உசேன் இருந்​துள்​ளார். இரு​வரும் குடி​போதை​யில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.


தகவலறிந்த முதுநகர் போலீ​ஸார் இரு​வர் மீதும் வழக்கு பதிவு செய்​து, எஸ்​எஸ்ஐ ராஜேந்​திரனை கைது செய்​தனர். இதற்​கிடை​யில், எஸ்​எஸ்ஐ ராஜேந்​திரன், காவலர் இமாம் உசேன் ஆகியோரை சஸ்​பெண்ட் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் எஸ்.ஜெயக்​கு​மார்​ நேற்​று உத்​தர​விட்​டுள்​ளார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%